அடுத்தவன் சீனை திருடாதே.. கமலை திட்டிய பிரபல இயக்குனர்
நடிகர் கமலஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்தியன் 2, கல்கி 2898 AD, தக் லைப் என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக ஒரு பெரிய தொகையும் சம்பளமாக பெறுகிறார் அவர்.
திட்டிய இயக்குனார்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்த அட்வைஸ் பற்றி எல்லாம் கமல் இன்று பேசினார். அப்போது இயக்குனர் கே.பாலசந்தர் தன்னை திட்டியது, அட்வைஸ் கொடுத்தது பற்றி எல்லாம் கூறினார்.
அவர் என்னை பாராட்டியதை எழுதினால் 4 பக்கம் வரும், ஆனால் திட்டியதை எழுதினால் 400 பக்கம் வரும்.
எப்படி நடிக்க வேண்டும், அடுத்தவன் சீனை திருடாதே என்று கூறுவார். அடுத்தவர் நடிக்கும்போது பின்னால் நெளியாதே என்றெல்லாம் கே.பாலச்சந்தர் என்னை திட்டுவார் என பிக் பாஸ் வீட்டில் கமல் கூறி இருக்கிறார்.