அர்ச்சனா, விசித்ராவை வெச்சி செஞ்ச கமல்! இதையே மாயா, பூர்ணிமா செய்திருந்தால்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போரிங் போட்டியாளர்கள் இருவரை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என்றபோது எல்லோரும் அர்ச்சனா மற்றும் விசித்ரா பெயரை தேர்வு செய்தனர்.
ஆனால் அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் சிறைக்கு செல்ல மறுத்தனர். அதனை பற்றி இன்றைய எபிசோடில் கமல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அர்ச்சனா, விசித்ராவை விமர்சித்த கமல்
உங்களுக்கு பதில் யார் சிறைக்கு சென்றிருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்க, அவர்கள் கானா பாலா மற்றும் பிராவோ ஆகியோரது பெயர்களை கூறுகின்றனர்.
நீங்கள் இருவரும் பேசிவைத்து கொண்டு ஒரே பெயரை சொல்கிறீர்கள். மற்றவர்கள் அதே போல ஒரே மாதிரி opinion இருக்க கூடாதா என கமல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் 'பூர்ணிமா, மாயா இதை செய்திருந்தால் கமல் இப்படியா பேசி இருப்பார்' என ட்ரோல் செய்து வருகின்றனர்.