பெயர் கெட்டுப்போச்சு.. அசிங்கப்படுத்திட்டார்.. என்னை வெளியில அனுப்பிடுங்க! கத்தி கதறிய தனலட்சுமி
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் தனலட்சுமி ஒரு டீமிலும் மற்றும் விக்ரமன் ஒரு டீம் ஓனராகவும் இருந்தனர்.
வரும் பணத்தை கல்லாபெட்டியில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என விதி இருக்கும் நிலையில் அதை மீறி தனலட்சுமி வெளியில் வைத்திருந்தார். அதன் பின் டாஸ்க் முடியும்போது, பணம் பெட்டியில் தான் இருந்தது என பொய்யாக உறுதிமொழி கொடுத்து வெற்றி பெற்றார்.
வெச்சி செஞ்ச கமல்
அந்த நேரத்தில் பிக் பாஸ் தனலட்சுமிக்கு வெற்றியை கொடுத்தாலும் இன்று ஷோவுக்கு வந்த கமல் தனலட்சுமியை லெப்ட் ரைட் வாங்கினார். அவரது வெற்றியை பறித்து விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்.
இது போன்ற ஊழல் சமூகத்திலும் நடக்கிறது என சொல்லி கமல் நீண்ட ஸ்பீச் கொடுத்தார். நான் நேர்மையை பற்றி மட்டும் தான் பேசுகிறேன் என கமல் கூறினார்.
கதறி கதறி அழுத தனலட்சுமி
அதன் பின் பாத்ரூமுக்கு சென்ற தனலட்சுமி கதறி கதறி அழுதார். 'என் பெயர் கெட்டுவிட்டது, என்னை வெளியில் அனுப்பிவிடுங்கள். எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திவிட்டார். நான் யார் காசையும் திருடவில்லை. இது திருட்டு என ஏற்றுக்கொள்ள முடியாது' என சொல்லி கதறினார்.
அவரை ஆயிஷா உள்ளிட்ட சிலர் ஆறுதல் படுத்தினார்கள்.