நானே ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிடுவேன்.. போட்டியாளர்களை எச்சரித்த கமல்
பிக் பாஸ்
பிக் பாஸ் ஷோ ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல பிரச்னைகள் போட்டியாளர்கள் நடுவில் வந்துகொண்டிருக்கிறது.
இந்த வாரம் கேரளா மாடல் ஷெரினா பிக் பாஸ் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட இருக்கிறார். அவர் குறைந்த அளவு வாக்குகள் பெற்ற நிலையில் அவர் வெளியேற்றப்படுகிறார்.
போட்டியாளர்களை எச்சரித்த கமல்
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்குக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை, வேறு மொழிகளில் பேசுவது, மைக்கை மூடிக்கொண்டு பேசுவது, ரகசியமாக பேசுவது, எழுதி காட்டுவது என செயல்களில் ஈடுபடுவதை தான் கமல் இன்று கண்டித்து இருக்கிறார்.
தேவைப்பட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் செய்வேன் என கமல் எச்சரித்து இருப்பது தற்போது ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது.
இதோ..
'ரஞ்சிதமே'.. பழைய பாடலை அப்படியே காபி அடித்த தமன்! வீடியோவுடன் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்