Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க
பிக்பாஸ் 9
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 9 நிகழ்ச்சி இதுநாள் வரை ஹிட்டானதா என்றால் தெரியவில்லை, ஆனால் ஒரே ஒரு எபிசோட் செமயாக வைரலாகிவிட்டது.
விளையாட்டு நிகழ்ச்சி என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்றாலும் ஒருவர் நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும், மனிதாபிமானம் இருக்க வேண்டும்.
ஆனால் அதெல்லாம் எங்களுக்கு கிடையாது என விளையாடியுள்ளார்கள் பார்வதி மற்றும் கம்ருதீன். இவர்கள் செய்த செயல் தற்போது ரெட் கார்ட்டு வாங்கி வெளியே செல்லும் நிலைக்கு ஆகிவிட்டது.

அவர்களுக்கு விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்து அனுப்பும் புரொமோ வெளியாக செம வைரலானது.
சம்பளம்
சீரியல் நடிகராக பிக்பாஸ் 9ல் விளையாட வந்த கம்ருதீன் ரூ. 15 முதல் ரூ. 20 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் தொகுப்பாளினி என்ற அடையாளத்துடன் பிக்பாஸ் வந்த பார்வதி நாளொன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே வந்தாராம்.