பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் தனது தனித்திறமையை காட்டிய கம்ருதீன்... யாரை வரைந்துள்ளார் பாருங்க, போட்டோ...
பிக்பாஸ் 9
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி.
கடந்த அக்டோபர் 9ம் தேதி 20 போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இந்த சீசன் தொடங்கப்பட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சாரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
அதேபோல் வைல்ட் கார்ட்டு என்டரியாக 4 பேர் நுழைந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்குள் வந்ததில் இருந்து நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

கம்ருதீன்
இந்த பிக்பாஸ் 9வது சீசனில் மகாநதி சீரியல் புகழ் கம்ருதீன் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் மக்களின் கோபத்திற்கு ஆளான இவர் இப்போது பிக்பாஸ் விளையாட்டை புரிந்துகொண்டு விளையாடி வருகிறார். சமீயத்திய எபிசோடில் கம்ருதீன் தனது ஸ்பெஷல் திறமையை வெளிக்காட்டியுள்ளார். ‘
அதாவது வீட்டில் Special Guestஆக சென்றுள்ள தீபக்கை வரைந்து காட்டியுள்ளார், அதைப்பார்த்து தீபக் வாழ்த்தியும் உள்ளார். இதோ அந்த போட்டோ,
