அந்த வலியை நான் இப்போதும் அனுபவித்துக்கொண்டு இருக்கேன்... கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர்
கனா காணும் காலங்கள்
தமிழ் சின்னத்திரையில் 90களில் விஜய் டிவியின் ரேஞ்சே வேறு.
மிகவும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள், கலக்கலான இளைஞர்களை கவரும் வண்ணம் சீரியல்கள் என ஒளிபரப்பு கலக்கினார்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்த ஒரு தொடர் தான் கனா காணும் காலங்கள்.
பள்ளி பருவ காலத்தை கண்முன் கொண்டு வந்த இந்த தொடர் இப்போதும் பலரின் பேவரெட் தான். அடுத்தடுத்து 2, 3 சீசன்கள் வந்தாலும் முதல் சீசன் போல் எதுவும் இல்லை.
ராகவேந்திரா
தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமான ராகவேந்திரன் புலி தனது கஷ்டமான பயணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என் பெற்றோர்கள் இல்லை என்றால் பிச்சை தான் எடுத்திருப்பேன்.
வாய்ப்பு கிடைத்தால் தான் வேலை, பெரிய லைம் லைட்டில் இருந்துட்டு கீழே விழுவது கஷ்டம். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஒருத்தன் மறுபடியும் தனது கேரியரை தொடங்குவது அதிக வலி.
நான் ரொம்ப ஜாலியா கலகலன்னு இருந்த பையன், பெரிய சரிவிக்குப் பிறகு அப்படியே அமைதி ஆகிவிட்டேன் என வருத்தப்பட்டு கூறியுள்ளார்.