கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் சங்கவியை நியாபகம் இருக்கா?... சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம்
கனா காணும் காலங்கள்
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் புதிய டிரெண்ட் உருவாக்கினார்கள்.
அதேபோல் அவர்கள் சீரியல்களில் புதிய டிரெண்ட் கொண்டு வந்தார்கள்.
மாமியார்-மருமகள் சண்டை, வில்லி-நாயகி சண்டை என இப்படியே சீரியல்கள் ஒளிபரப்பாகிய காலத்தில் பள்ளி கால பருவத்தில் நடக்கும் அழகான விஷயங்களை காட்டும் வண்ணம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் கனா காணும் காலங்கள்.
இந்த தொடருக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
சங்கவி
கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த அனைவருமே சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்கள். ஆனால் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த மோனிஷா தனது மருத்துவ படிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டார்.
தொகுப்பாளினியாக, நடிகையாக வலம் வந்தவர் சில காலம் மருத்துவராக பணியாற்றிய பிறகு தற்போது மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார்.
அதாவது அவர் இதயம் முரளி படத்தில் நடித்துள்ளாராம், இதனை அவரே தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.