கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் ஜோவை நியாபகம் இருக்கா?.. ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ
கனா காணும் காலங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தரமான சீரியல்களில் ஒன்று தான் கனா காணும் காலங்கள்.
பள்ளி பருவ கால அழகான விஷயங்களை காட்டி மக்களை கட்டிப்போட்டார்கள்.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து அதே பெயரில் அடுத்தடுத்த சீசன்கள் வந்தாலும் முதல் பாகத்தை போல ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த கனா காணும் காலங்கள் தொடரில் மக்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ஜோ என்கிற ஜோசஃப் வேடம், இவரது நிஜ பெயர் யுதன் பாலாஜி.
ஜாலியாக பேசி மற்றவர்களை கலாய்ப்பது, ரகளை செய்வது என தொடர் முழுவதும் ஸ்கோர் செய்வார்.
லேட்டஸ்ட்
இந்த தொடககு பிறகு வெள்ளித்திரையில் களமிறங்கியவர் 2009ம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் ஜெரி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
2010ல் வெளியான காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார், அதன்பின் மெய்யழகி, நகர்வலம் என நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
2016ம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார், பின் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்று விட்டனர். தற்போது யுதன் பாலாஜி ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.