விஜய் டிவியில் வரப்போகும் இன்னொரு புத்தம் புதிய தொடர்... புரொமோ இதோ
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் இப்போது சீரியல்களுக்கும் பஞ்சம் இல்லை.
மதிய நேரம், மாலை, இரவு என தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. டாப்பில் இருப்பது என்றால் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி போன்ற தொடர்கள் ஹிட்டாக ஓடுகிறது.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி களமிறங்கியதால் சில சீரியல்கள் முடிக்கப்பட்டது, நேரம் மாற்றப்பட்டது.

புதிய தொடர்
இன்னும் சில வாரங்களில் பிக்பாஸ் 9 முடிவுக்கு வரப்போகிறது, எனவே அந்நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்தில் புதிய சீரியல்களை களமிறக்க விஜய் டிவி தயாராகிவிட்டது.
வரும் திங்கள் முதல் சுட்டும் விழ சுடரே என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. சில தினங்களுக்கு முன் அழகே அழகு என்ற புதிய சீரியலின் புரொமோ வெளியாக இப்போது மற்றொரு புதிய சீரியலின் புரொமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.
கனா கண்டேனடி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடர் 3 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்பது மட்டும் தெரிகிறது.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan