விஜய் டிவியின் கனா கண்டேனடி சீரியல் ஆரம்பமாகும் தேதி, நேரம்... முழு விவரம்
பிக்பாஸ்
விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்து வந்த பிக்பாஸ் 9வது சீசன் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.
20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 9வது சீசன் டைட்டிலை வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த திவ்யா வென்றுவிட்டார், முதல் ரன்னர் அப்பாக சபரியும், அடுத்து விக்ரமும் தேர்வானார்கள்.
இப்போது பிக்பாஸ் குறித்து ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

கனா கண்டேனடி
பிக்பாஸ் 9வது சீசன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் களமிறங்கவுள்ளது.
அப்படி புதியதாக களமிறங்கப்போகும் சீரியல் தான் கனா கண்டேனடி. 3 நெருங்கிய தோழிகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாக போகும் இந்த சீரியலின் புரொமோக்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
‘
VC ரவி இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் இன்று (ஜனவரி 19) தொடங்க திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.