பல வருடங்கள் கழித்து மீண்டும் வரும் கனா காணும் காலங்கள், ஆனால் விஜய் டிவி-ல் இல்லையா!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி-யில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர் தான் கனா காணும் காலங்கள்.
விஜய் டிவி-யில் பல்வேறு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
இதனிடையே மீண்டும் கனா காணும் காலங்கள் ஒளிபரப்பாகவுள்ளது குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் Disney Hotstar-ல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்..
நம்ம பள்ளிப்பருவத்தோட அழகிய தருணங்கள நினைவூட்டி மகிழ்விக்க வருகிறது.. #கனாகாணும்காலங்கள் #KKK #KanaaKaanumKaalangal pic.twitter.com/AstWEJT37t
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) December 29, 2021