400 படங்களுக்கு மேல் நடித்த பிரபலம் மரணம்! வில்லனாக பட்டையை கிளப்பியவருக்கு நேர்ந்த சோகம்!
சினிமாவில் கடந்த ஆண்டு நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலும் சினிமா வட்டாரத்தில் சில இறப்புகள் நிகழ்ந்துள்ளன.
கன்னட சினிமாவின் பழம் பெரும் நடிகர் Shani Mahadevappa உடல் நலக்குறைவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 88.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த நடிகர் ராஜ்குமாருடன் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.
வில்லன், குணச்சித்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் என 400 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளாராம்.
நீண்ட காலமாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு உடல் நலமின்மையால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கவிரத்னா காளிதாஸ் படத்தின் அவர் நடித்த பண்டித் திண்டிமா கதாபாத்திரம் மூலம் Shani Mahadevappa பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
??????? ? pic.twitter.com/w1ORC6borD
— Kichcha Sudeepa (@KicchaSudeep) January 3, 2021