வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதால், செம கடுப்பான நடிகை கங்கனா ரணாவத்! என்ன கோவம் அவங்களுக்கு..
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரணாவத். இவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று அனைவரின் விமரிசனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
இன்று மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார் அப்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக கூறி அறிவித்து இருந்தார்.
இதனால் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்களத்தில் இருந்த விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
ஆனால் இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ததில் ஒருவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆம் நடிகை கங்கனா ரணாவத் தான் இதனால் ஏமாற்றம் அடைத்துள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "தெருவில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கிவிட்டார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அல்ல, இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான்.. இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு அனைவரின் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.