ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 ஹீரோயின் இவர்தான்.. யாரும் எதிர்பார்க்காத ஒருவர்!
தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், இயக்கம் என பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கியும், நடித்தும் கடந்த 2011 - ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அதை தொடர்ந்து காஞ்சனா படத்தின் 2 மற்றும் 3 - ம் பாகத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ்.
இந்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலித்ததால் காஞ்சனா படத்தின் 4 - வது பாகம் எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
ஹீரோயின்
இந்த நிலையில், காஞ்சனா படத்தின் 4 - வது பாகம் குறித்து ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த 4 - வது பாகத்திற்கான கதை பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாம். இந்த படத்தை வட இந்திய நிறுவனமான கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான, அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
