இரண்டு கதாநாயகிகளுடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் காஞ்சனா 4.. துவங்கிய படப்பிடிப்பு
காஞ்சனா
ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். இதனால் தொடர்ந்து அவரிடம் காஞ்சனா 4 குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் காஞ்சனா 4 படப்பிடிப்பு துவங்கிவிட்டதாம். இப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சனா 4 பட்ஜெட்
இப்படியிருக்க காஞ்சனா 4 படத்தின் பட்ஜெட் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். இதில், பாலிவுட் நிறுவனமான கோல்டு மைன்ஸ் தான் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ரூ. 90 கோடி பட்ஜெட்டில் காஞ்சனா 4 பிரம்மாண்டமாக உருவாகிறது என அவர் கூறியுள்ளார்.
முதலில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்த நிலையில் பட்ஜெட் ஒத்துப்போகாத காரணத்தினால், இந்த படம் கோல்டு மைன்ஸிடம் சென்றுள்ளது.
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)