சந்திரமுகியாக நடிக்கும் பிரபல ஹிந்தி நடிகை! வெளியான சூப்பர் தகவல்
சந்திரமுகி 2
பி.வாசு தற்போது இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக லாரன்ஸ் உடலை மிகவும் பிட் ஆக மாற்றி இருக்கும் போட்டோவும் முன்பு வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில் நடித்த ஜோதிகா இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதால், சந்திரமுகியாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வி இருந்து வந்தது.
சந்திரமுகியாக கங்கனா
தற்போது ஹிந்தி நடிகை கங்கனா சந்திரமுகி 2ல் நடிப்பது பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
இந்த செய்தி தற்போது படுவைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே கங்கனா தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி