பிக் பாஸுக்கு போட்டியாக வரும் புது ஷோ! சிறையில் அடைக்கப்படும் போட்டியாளர்கள்.. கங்கனா தொகுப்பாளர்
சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவரும் நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்கள் தான் முக்கியமானவை. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஷோ வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவை. அதன் உரிமையும் வெளிநாட்டு நிறுவனங்கள் தான் பெற்றிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸுக்கு போட்டியாக லாக்கப் என்கிற ஷோவை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் அறிவித்து உள்ளார். இந்த ஷோவுக்கு தொகுப்பாளர் நடிகை கங்கனா ரணாவத் தான்.
இதில் போட்டியாளராக வரும் நபர்கள் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள். ஒரு செலிபிரிட்டி வார்டனும் ஷோவில் இருக்க போகிறார்.
நேற்று இந்த நிகழ்ச்சி பற்றிய பிரெஸ் மீட் நடைபெற்றது. அதில் கங்கனா பிக் பாஸ் தொகுப்பாளர் சல்மான் கானை ட்ரோல் செய்யும் வகையில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் ஓடிடி தளதத்தில் இந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.