இந்த போட்டோவில் இருக்கும் 'சந்திரமுகி' நடிகை யார் தெரியுமா?
நேற்று ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் Siblings Day கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களது சகோதர சகோதரிகளின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகை கங்கனாவும் அவரது உடன் பிறந்தவர்கள் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். சின்ன வயதில் அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் அது வைரல் ஆகி இருக்கிறது.
"சின்ன வயதில் டாம் அண்ட் ஜெரி போல அடித்துக்கொண்டாலும், தற்போது வளர்ந்த பிறகு தான் எல்லாம் புரிகிறது.. siblings இருப்பது எவ்ளோ ஸ்பெஷல் என்று" என கங்கனா குறிப்பிட்டு இருக்கிறார்.
கங்கனா தற்போது பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டப் பலரும் அந்த படத்தில் நடித்து வருவது குறிபிடத்தக்கது.
