'தலைவி' கதாநாயகி கங்கனா ரணாவத் எடுத்துள்ள புதிய அவதாரம் - அதிரடியான முடிவு
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்.
இவருடன் இணைந்து அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 23ஆம் தேதி 'தலைவி' வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக 'தலைவி' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இந்நிலையில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கணா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது மணிகர்னிகா பிலிம்ஸ் சார்பில் 'டிக்கு வெட்ஸ் ஷெரு' என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.
இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri