மும்பையில் உள்ள தனது பங்களாவை பல கோடிக்கு விற்றுள்ள நடிகை கங்கனா ரனாவத்...
கங்கனா ரனாவத்
பாலிவுட் சினிமாவில் கான்களுடன் நடித்தால் தான் சினிமாவில் ரீச் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.
ஆனால் அந்த நம்பிக்கையை உடைத்து தரமான படங்கள் நடித்தால் கண்டிப்பாக முன்னேற முடியும், முன்னணி நாயகியாக வலம்வர முடியும் என்பதை தனது வெற்றிப்படங்கள் மூலம் காட்டியவர் நடிகை கங்கனா ரனாவத்.
தமிழில் கடைசியாக இவர் மறைந்த ஜெயலலிதா அவர்களை மையமாக உருவாக்கப்பட்ட படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் சந்திரமுகி 2ம் பாகத்திலும் நடித்திருந்தார்.
பங்களா
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
டெல்லி, இமாச்சல பிரதேசம் என அங்கேயே அதிகம் தங்கும் கங்கனா ரனாவத் மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை விற்க முடிவு செய்துள்ளாராம்.
அங்கு தனது தயாரிப்பு நிறுவன அலுவலகத்தையும் அவர் நடத்தி வந்துள்ளார். இந்தப் பங்களாவை ரூ.40 கோடிக்கு அவர் விற்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
