நடிகை கங்கனாவிற்கு விரைவில் திருமணமா! அவரே சொன்ன விஷயம்..
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். தன் அசாத்திய நடிப்பால் தனக்கென தனி இடத்தை பிடித்து பல ஹிட் படங்களை கொடுத்து நாட்டின் பல உயரிய விருதுகளை தன கைவசம் வைத்துள்ளார் இவர்.
தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் தலைவியை போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானவர். சமீபத்தில் பத்ம விருதையும் வாங்கியிருந்த நிலையில் தான் தன திருமணத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை அவரே அறிவித்திருக்கிறார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், வருகிற ஆண்டுகளில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று கங்கனா ரணாவத்திடம் கேட்டபோது, 'விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்.
வர இருக்கும் ஆண்டுகளில் குழந்தைகள் பெற்று ஒரு தாயாக என்னை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்' என பதில் கூறியிருக்கிறார்.