தொகுப்பாளரான பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.. அதுவும் வித்தியாசமான நிகழ்ச்சியில்
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கங்கனா ரனாவத்.
இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படத்தில் ஜெயலலிதாவை போல் நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், தற்போது தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளாராம்.
ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதில் 16 விஐபிகளை தனியாக லாக்கப்பில் அடைத்து விடுவார்கள். அவர்களுக்கு போன், டிவி, கடிகாரம் என்று எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
இந்தச் சூழலில் அவர்கள் பல மாதங்கள் இருப்பார்களாம்.
இந்த நிகழ்ச்சியை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க உள்ளதால், நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.