கங்கனா ரனாவத் நிகழ்ச்சிக்கு தடை.. தீடீரென வந்த அதிர்ச்சி செய்தி
பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படத்தில் ஜெயலலிதாவை போல் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், தற்போது தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளாராம்.
ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், நேற்று மாலையில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று தகவல் வெளியான நிலையில், லாக்கப் நிகழ்ச்சிக்கு தடைகேட்டு ஐதராபாத்தை சேர்ந்த தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. லாக்கப் டைட்டிலும், அதன் கண்டன்டும் எங்களுடையது. அதனை நாங்கள் காப்புரிமை பதிவு செய்துள்ளோம்.
எனவே லாக்கப் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம், சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..