2 நாட்களில் கங்குவா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கங்குவா படம், ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், 2 நாட்களில் கங்குவா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்கள் வசூல்
அதன்படி, 2 நாட்களில் உலகளவில் கங்குவா படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாள் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் வசூல் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri