13 நாட்களில் கங்குவா படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
கங்குவா படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த 14ஆம் தேதி வெளிவந்தது. சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.
மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், கருணாஸ், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தனர். இது படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது.

வசூல்
முதல் நாளில் வசூலில் பட்டையை கிளப்பிய கங்குவா, அதற்கு அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், 13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கங்குவா படம் இதுவரை உலகளவில் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu