கங்குவா 17 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூல் சரிவை சந்தித்தது. ஆனாலும், கங்குவா படம் தயாரிப்பாளருக்கு பெரிதளவில் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
வசூல்
இந்த நிலையில் 17 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கங்குவா படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 17 நாட்களில் ரூ. 112 கோடி வசூல் செய்துள்ளது.

பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை - அமைச்சர் ராஜ்மோகன் IBC Tamilnadu