தமிழ்நாட்டில் 4 நாட்களில் கங்குவா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கங்குவா.
பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்ட நிலையில், சிலர் மோசமான வகையிலும் படத்தை கிண்டல் செய்து விமர்சனத்தினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ஜோதிகா நேற்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். முதல் நாள் இப்படத்திற்கு அமோக வசூல் வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் சரிவை சந்தித்தது.
தமிழ வசூல்
இந்த நிலையில், 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video

ஒருபக்கம் நிலநடுக்கம் பேரிடர்... மறுபக்கம் கிராமங்கள் மீது குண்டு வீசும் மியான்மர் இராணுவம் News Lankasri
