தமிழ்நாட்டில் 7 நாட்களில் கங்குவா செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கங்குவா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கங்குவா.
இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி, போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கங்குவா படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.
தமிழக வசூல்
இந்த நிலையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கங்குவா, இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 34 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
