கங்குவா பட முக்கிய டெக்னீசியன் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கங்குவா
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கங்குவா. சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விவரம் எவ்வளவு தெரியுமா?- அதிகம் வாங்குவது யார்?
மேலும் இப்படத்தில் திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
டெக்னீஷன் மரணம்
இந்த நிலையில், கங்குவா படக்குழு மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் படத்தின் முக்கிய டெக்னீசியன் மரணமடைந்துள்ளார். ஆம், கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் (43) இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள பனம்பில்லி நகரில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த தகவல் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவர் கங்குவா படம் மட்டுமின்றி டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த தல்லுமாலா படத்திற்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20யில் 304 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து! 141 ஓட்டங்கள் விளாசிய வீரர்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம் News Lankasri
