கங்குவா படம் OTT-ல் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது தெரியுமா.. இதோ பாருங்க
கங்குவா
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தின் OTT உரிமை விற்பனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூல் சரிவை சந்தித்தது. ஆனாலும், கங்குவா படம் தயாரிப்பாளருக்கு பெரிதளவில் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.
OTT விலை
இந்த நிலையில், கங்குவா படம் எத்தனை கோடிக்கு OTTக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா படத்தை ப்ரைம் OTT தளம் ரூ. 100 கோடிக்கு வாங்கியுள்ளது என கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
