கங்குவா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா
கங்குவா
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கங்குவா. சூர்யா நடிப்பில் ஃபாண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு டி எஸ் பி என செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கங்குவா படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர், படம் சிறப்பாக வந்துள்ளது என பாராட்டி பேசியிருந்தார். இந்த நிலையில், கங்குவா படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீ புக்கிங் வசூல்
இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே ப்ரீ புக்கிங் மூலம் கங்குவா படம் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

சுமார் 10,000 ஸ்க்ரீன்களில் வெளிவரவிருக்கும் கங்குவா படம் கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri