கங்குவா படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
கங்குவா
ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் கங்குவா. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடித்து திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பிரமாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். கங்குவா படத்திற்கான வெளிநாட்டு ப்ரீ புக்கிங் சமீபத்தில் துவங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 6 நாட்கள் இருக்கும் நேரத்தில் இதுவரை வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 2.4 கோடி வரை கங்குவா படம் வசூல் செய்துள்ளது.
உலகளவில் 10,000 திரையரங்கங்களில் இப்படம் வெளிவரும் என கூறப்பட்டுள்ள நிலையில், ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கிலேயே இப்படம் மாபெரும் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கங்குவா ப்ரீ புக்கிங் வசூல் எந்த அளவிற்கு இருக்கப்போகிறது என்று..