அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கங்குவா படத்தின் டீசர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா
கங்குவா
சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, யோகி பாபு, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பொங்கல் டிரீட்
இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், வருகிற பொங்கல் பண்டிகை அன்று சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக கங்குவா படத்தின் இரண்டாவது லுக் அல்லது டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.