காத்திருந்த சூர்யா ரசிகர்கள்.. நாளை வெளியாகும் கங்குவா படத்தின் முக்கிய விஷயம்
கங்குவா
கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆன நிலையில் சூர்யாவின் திரைப்படம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. கடைசியாக சூர்யா ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்திற்கு பின் கங்குவா படத்தில் கமிட்டானார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
டீசர் அப்டேட்
சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர். நாளை மாலை கங்குவா படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இத்தனை நாளாக காத்திருந்த சூர்யாவின் ரசிகர்கள் தற்போது இதனை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் மற்றும் போஸ்டர்கள் வெறித்தனமாக இருந்த நிலையில், அடுத்ததாக டீசர் வெளிவரவிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கங்குவா படத்தின் டீசர் எப்படி இருக்க போகிறது என்று.

விஜய், அஜித், விக்ரம் நிராகரித்த ப்ளாக் பஸ்டர் திரைப்படம்.. சூர்யா நடித்து மாபெரும் அளவில் ஹிட்டானது
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பாட்னி முதல் முறையாக நடிக்கிறார். மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபி தியோல் தான் கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லன். இவர்கள் மட்டுமின்றி யோகி பாபு, கோவை சரளா போன்ற நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=3AA_qycmP_8
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan