கங்குவா மூலம் மீண்டும் தன் கோட்டையை கைப்பற்றும் சூர்யா, இந்த முறை மிக பலமாக
சூர்யா
சூர்யா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்து உச்சம் தொட்டவர். அதிலும் சமீபத்திய சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் சூர்யா திரைப்பயணத்தை மேலும் ஒரு படி மேலே கொண்டு சென்றது.
தற்போது சூர்யா தியேட்டர் படமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதற்காக கங்குவா படத்தை மிகவும் நம்பியுள்ளார். கேரளாவில் ஒரு காலத்தில் விஜய்க்கு நிகராக ரசிகர்கள் பலம் கொண்டவராக இருந்தவர் சூர்யா.
500 தியேட்டர்
கடந்த சில வருடங்களாக அங்கு தன் ரசிகர்கள் படை குறைந்து வருவதை அறிந்து, இந்த முறை இறங்கி அடிக்க வேண்டும் என கங்குவாவை சுமார் 500 திரையரங்குகளில் சூர்யா திரையிட உள்ளாராம். இந்த படம் ஹிட் அடித்தால் கேரளாவில் தன் பலத்தை மிகப்பெரும் அளவில் சூர்யா மீண்டும் கொண்டு வருவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
