மீண்டும் விஜய் டிவிக்கு வந்த குக் வித் கோமாளி கனி.. அதுவும் எந்த நிகழ்ச்சியில் தெரியுமா
ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.
அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 2-வில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் கனி.
இவர் இயக்குனர் திருவின் மனைவியும், இயக்குனர் அகத்தியனின் மகளும் ஆவார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்பு விஜய் டிவிக்கு வராத கனி, தற்போது மீண்டும் விஜய் டீவியில் ஒளிபரப்பாகவுள்ள 'சவுண்ட் பார்ட்டி' நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ..