84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா?
பிக்பாஸ் 9
ஆரம்பத்தில் இருந்து சண்டை, பிரச்சனை, பேட் டச் விவகாரம், பிக்பாஸை அவமதிப்பது, கட்டுப்பாடுகளை மதிக்காமல் இருப்பது போன்ற விஷயங்களே இந்த சீசனில் அதிகமாக நடந்தது.
இப்போது ஒரு வாரம் ஒருவர் எலிமினேட் ஆவதும், சில வாரங்கள் டபுள் எவிக்ஷன் நடப்பதுமாக உள்ளது. வாரா வாரம் வரும் விஜய் சேதுபதி போட்டியில் நடக்கும் விஷயங்களை பாராட்டுவதை தாண்டி நிறைய பஞ்சாயத்து செய்வதே அதிகமாக உள்ளது.

சம்பளம்
கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய கனி, கொஞ்சம் எமோஷ்னலாக ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதாவது தான் இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறுவேன் என எதிர்ப்பார்க்கவில்லை, என்னை ஏன் மக்களுக்கு பிடிக்கவில்லை என தெரியவில்லை. சரி இதுநாள் வரை எனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 9 வீட்டில் 84 நாட்கள் விளையாடிய கனி ஒரு வாரத்திற்கு ரூ. 1.2 லட்சம் என 84 நாட்களுக்கு ரூ. 14,40,000 வாங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது.