எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய கனிகா.. அடுத்து என்ன செய்கிறார் தெரியுமா?
எதிர்நீச்சல்
சின்னத்திரையில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் 2. இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் நடிகை கனிகா ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆதி குணசேகரன் ஈஸ்வரியை அடித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என கதை நகர்ந்தது.
நடிகை கனிகா
அதன்பின், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளிவந்தது. இது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. இருப்பினும், அவர் மீண்டும் நடிக்க வருவார் என சிலர் கூறி வந்தனர்.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை கனிகா தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நடிகை கனிகா மீண்டும் எதிர்நீச்சலில் நடிக்கப்போவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.