எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை.. காரணம் இதுதான்

Report

எதிர்நீச்சல்

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். TRP-யில் டாப் 5ல் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் தற்போதைய கதைக்களம்படி ஜனனி கர்ப்பமாகி உள்ளார். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ஜனனி பலவீனமாக இருக்கிறார் அவரை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் சக்தியிடம் கூறியிருந்தார்.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை.. காரணம் இதுதான் | Kaniha Reason For Out From Ethirneechal Serial

எதிர்நீச்சல் கதைக்களம் ஒரு பக்கம் இருக்க, இந்த சீரியலில் ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா திடீரென சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

கில்லி - துணிவு படங்களின் ரீ ரிலீஸ் வசூல்.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்

கில்லி - துணிவு படங்களின் ரீ ரிலீஸ் வசூல்.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்

வெளியேறிய நடிகை

இவர் எதற்காக வெளியேறினார் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவல் வெளிவரவில்லை. இந்த நிலையில், நடிகை கனிகா சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் எதற்காக எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறினேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை.. காரணம் இதுதான் | Kaniha Reason For Out From Ethirneechal Serial

இதில், "எனது மகன் தற்போது 10வது படிக்கிறார் அவருடைய படிப்பு தனக்கு மிகவும் முக்கியம். அவனை கவனித்துக்கொள்ள வேண்டும், அதனால்தான் சீரியலில் இருந்து வெளியேறினேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. இயக்குநர் சாரிடம் ஏற்கனவே நான் கூறிவிட்டேன். தயாரிப்பு நிறுவனத்திற்கும் சேனலுக்கும் அது தெரியும்" என கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US