'நான் கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்'- கன்னிகா சினேகன் எமோஷனல் இன்டெர்வியூ!
கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு ஒளிப்பரப்பாகிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்னும் தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானவர் நடிகை கன்னிகா ரவி.
இவர், தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியரும் பிக் பாஸ் 1 மூலம் புகழ் பெற்றவருமான கவிஞர் சிநேகனை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார்.
8 வருடங்களாக காதலித்து வந்த இவர்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
தற்போது இவர்கள் இருவரும் நம் Cineulagam நடத்திய சிநேகனின் காதல் கதை என்னும் சிறப்பு நேர்காணலில் பங்கேற்று தங்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி பகிர்ந்துள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கன்னிகாவிடம் மூன்று ரோஜாப்பூக்களை கொடுத்து அதிலிருந்து ஒன்றை எடுத்து ’நீ என் வாழ்வில் இல்லையெனில் நான் என்னவாக இருந்திருப்பேன்’ என்ற கேள்விக்கு பதில் கூறி அதனை சிநேகனிடம் கொடுக்கச்சொல்லி கேட்டபோது.
கன்னிகா 'என்னை இவ்வளவு அதிகம் புறிந்துகொண்டு என்னை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொள்ளும் நீங்கள் எனக்கு கணவராக அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நீங்கள் இல்லை என்றால் நான் கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன்' என எமோஷனலாக பதில் அளித்துள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அணு ஆயுத அச்சுறுத்தல், AI-ன் தீய பயன்பாடு... மனிதகுல அழிவிற்கு நாள் குறித்த ஆய்வாளர்கள் News Lankasri