பாரதி கண்ணம்மா சீரியலால் நான் இதையெல்லாம் இழந்தேன்- முதன்முறையாக கூறிய நடிகை கண்மணி
பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதும் முடியும் என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
காரணம் ஒரே ஒரு பிளாட்டை வைத்துக் கொண்டு அதை சொன்னால் கதை முடிந்துவிடும் என ஏதேதோ செய்து வருகிறார் இயக்குனர். கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதியை வைத்து ஒரு வாரம் ஓட்டினார்.
கடந்த வாரம் கண்ணம்மாவை வைத்து டுவிஸ்ட் என அதை ஒன்றுமே இல்லாமல் முடித்தார். எனவே தயவுசெய்து கதை இல்லை என்றால் முடித்துவிடுங்கள் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு வந்துவிட்டார்கள்.
கடைசியாக சீரியலில் இருந்து கண்மணி வெளியேறியிருந்தார். அவர் ஒரு பேட்டியில், பாரதி கண்ணம்மாவில் அஞ்சலி வேடத்தை இப்போதும் நான் மிஸ் செய்கிறேன், 3 வருடங்கள் நடித்துள்ளேன்.
அது எனது முதல் சீரியல், மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தது. இந்த பாரதி கண்ணம்மா சீரியலால் நான் நிறைய வாய்ப்பை இழந்தேன்.
இனியும் இதில் வேண்டாம் வேறு முயற்சி செய்வோம் என்று தான் வெளியே வந்தேன் என கூறியுள்ளார்.