வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ
அன்புடன் கண்மணி
கண்மணி அன்புடன், விஜய் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.
நவின் வெற்றி, மதுமிதா, கிரேஸி தங்கவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடர் அழகிய ஜோடியின் வாழ்க்கை பயணத்தை பற்றிய கதையாகும்.
சீரியலின் கடைசி எபிசோடில், அன்பு தனது பிறந்தநாளை கண்மணியுடன் தனியாக கொண்டாட தீவிற்கு செல்கிறார்.

அங்கு எதிப்பாரா விதமாக எல்லாம் தண்ணீரில் அடித்து செல்ல தனியாக தீவில் போராடியுள்ளனர், அந்த நேரத்தில் இருவரும் தங்களது தனிமையை கொண்டாடியுள்ளனர். வீட்டிற்கு வந்த அன்புவிடம் வெண்ணிலா காதல் வசனம் பேச ஒரு ஹைலைட் காட்சியாக நேற்றைய எபிசோடில் ஒளிபரப்பானது.

அடுத்த வாரம்
தற்போது அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் அன்பு அறைக்கு சென்று வெண்ணிலா உங்கள் மனதில் நான் தான் உள்ளேன், அதை ஏன் மறைக்கிறீங்கள் என கேட்க, அன்பு என் மனதில் நீ இல்லலே இல்லை என்கிறார்.
அதற்கு வெண்ணிலா, நீங்கள் என்னை காதலித்தது நிஜம் என கூற அதை கண்மணி கேட்டு செம ஷாக் ஆகிறார். அடுத்து என்ன நடக்குமா, அடுத்த வாரம் காண்போம்.