செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் முக்கிய படத்தில் நடிக்கிறாரா?- அவர் சொன்ன விஷயம்
சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் நிறைய பேர் மக்களிடம் பிரபலம் ஆகியுள்ளனர். அப்படி இப்போது ரசிகர்களிடம் அதிகம் பேசப்படுவது கண்மணி சேகர்.
இளம் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது, அவரது சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பாலோவர்கள் எல்லாம் உள்ளனர். அண்மையில் தனது பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், ஜெயா தொலைக்காட்சியில் தான் செய்தி வாசிப்பாளராக எனது பயணத்தை தொடங்கினேன். இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
நான் செய்தி வாசிக்கும் போது அதிகம் பயந்தது எனது அப்பாவிற்கு தான். காரணம் அவர் நான் செய்தி வாசிக்கும் போது செய்யும் தவறுகள் அனைத்தையும் கவனித்து கூறுவார்.
எனக்கு சீரியல் மற்றும் சில முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் எனக்கு செய்தி வாசிப்பது தான் மிகவும் பிடித்தமான வேலை, அதை விட்டுட்டு வேறு ஒரு துறையில் வேலை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நான் இன்னும் இந்த துறையில் கற்றுக்கொண்டு சாதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.