சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகரின் மனைவி- சோகத்தில் குடும்பம்
விஜய ராகவேந்திரா
கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய ராகவேந்திரா.
கடந்த 2007ம் ஆண்டு போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்க சௌர்யா என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வா என்கிற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
விஜய ராகவேந்திரா மற்றும் ஸ்பந்தனா, மகன் என 3 பேரும் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு திடீரென ஸ்பந்தனாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் வெளியாக அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஸ்பெஷல் தினத்தில் தனது மகனின் சூப்பர் புகைப்படத்தை வெளியிட்ட மிர்ச்சி செந்தில்- குவியும் லைக்ஸ்