பல் வலியால் ஹாஸ்பிடலுக்கு சென்ற நடிகை! முகம் கோரமாக மாறியதால் அதிர்ச்சி
பெங்களூரில் ஒரு நடிகை பல் வலிக்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில் முகம் அதிகம் கோரமாக மாறி இருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து இருக்கும் நடிகை ஸ்வாதி சதீஷ் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு பல்வலி காரணமாக பெங்களூரில் ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்று இருக்கின்றனர். அங்கு அவருக்கு ரூட் கேனால் சிகிச்சை செய்து இருக்கின்றனர்.
ஆனால் முகத்தில் அவருக்கு அதிகம் அளவு வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அது இரண்டு நாட்களில் சரியாகிவிடும் என கூறி இருக்கின்றனர். ஆனால் பல நாட்கள் ஆகியும் வீக்கம் குறையாமல் முகம் கோரமாக மாறி இருக்கிறது. மருத்துவமனையிலும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.
சிகிச்சைக்கு முன் மயக்க மருந்துக்கு பதில் தவறான மருந்தை செலுத்தியதால் தான் அவர் முகத்தில் இப்படி ஆகி இருக்கிறது என சொல்லப்படுகிறது.
அவர் வேறு மருத்துவமனைக்கு சென்று தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.