வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பிரபல இயக்குனர்... ஷாக்கில் திரையுலகம்
குருபிரசாத்
கன்னட சினிமாவில் வலம்வரும் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் குருபிரசாத்.
இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் ரங்கநாயகா. ஜக்கேஷ், பிக்பாஸ் புகழ் ரச்சிதா மகாலட்சுமி ஜோடியாக நடித்த படம்தான் அது. இதற்கு முன்பும் 2 படங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.
தற்போது அடேமா என்கிற படத்தை இயக்கி வந்த நிலையில் இவரைப் பற்றி அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
52 வயதான குரு பிரசாத் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது, அவர் இறந்து 4, 5 நாட்கள் ஆகியிருக்கும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். குரு பிரசாத் தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. 3
இந்நிலையில் குருபிரசாத்தின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது குருபிரசாதின் இறப்பு கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.