கண்ணை நம்பாதே திரை விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மு. மாறன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே.
திரில்லர் கதைக்களத்தில் உதயநிதி எப்படி நடித்துள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமின்றி இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனர் மு. மாறன் இப்படத்தை எப்படி இயக்கியுள்ளார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள்.
இப்படி மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
கதைக்களம்
குடியேருவதற்காக உதயநிதி ஸ்டாலின் தனது நண்பருடன் வீடு தேடி வருகிறார், இந்த சமயத்தில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. ஆனால் இந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா தங்கியிருக்கிறார். அவருடன் சேர்ந்து அதே வீட்டில் தங்க முடிவெடுத்து குடியேறுகிறார் உதயநிதி.
வீட்டிற்கு வந்த அதே நாள் இரவில் பிரசன்னா, உதயநிதியை சரக்கு அடிக்க வாருங்கள் என அழைக்கிறார். தனக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இல்லை என உதயநிதி கூற சரக்கடிக்கும் பழக்கம் இருக்கும் உதயநிதி நண்பன் சதீஸ் இவர்களுடன் இணைகிறார்.
மூவரும் பாருக்கு சென்ற நேரத்தில், நடிகை பூமிகா தள்ளாடி கொண்டே தன்னுடை காரை கொண்டு வந்து ஓரு இடத்தில் மோதுகிறார். இதை பார்க்கும் உதயநிதி அவருக்கு என்ன ஆனது என பார்க்க காரின் அருகே செல்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார் ஆனால், அவரால் காரை ஒட்டி செல்ல முடியாது என்பதினால் உதயநிதியே பூமிகாவை அவருடைய வீட்டிற்கு காரை ஒட்டி செல்கிறார்.
தன்னை வீட்டில் இறக்கி விட்டதனால் தன்னுடைய காரை எடுத்து செல்லுங்கள் என பூமிகா கூறுகிறார். இதனால் பூமிகாவின் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார் உதயநிதி.
அடுத்த நாள் காலையில் காரை பூமிகாவிடம் திருப்பி கொடுக்க செல்லும் பொழுது காரின் டிக்கியில் இறந்துப்போய் பிணமாக கிடக்கிறார் பூமிகா. இதனால் உதயநிதியும் அதிர்ச்சியடைக்கிறார்.
பூமிகா எப்படி இறந்தார்? ஒரே இரவில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் உதயநிதி சிறப்பாக நடித்துள்ளார். கொலையை யார் செய்தது, இதன் பின்னணி என்ன என்று தேடும் உதயநிதியின் நடிப்பு படத்திற்கு பலம்.
பிரசன்னா வழக்கம் போல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பின்னிபெடலெடுக்கிறார். கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் பூமிகாவின் நடிப்பு பிரமாதம். கதாநாயகி ஆத்திமா தனக்கு கொடுத்த கதாபாத்திரதை அழகாக நடித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் நடிப்பு படத்துடன் ஒன்றிபோகிறது மற்றபடி அனைவரும் படத்திற்கு தேவையானதை செய்துள்ளார்கள்.
இயக்குனர் மு. மாறன் இயக்கம் நன்றாக இருந்தாலும் புதிதாக நம்மை கைத்தட்ட வைக்கும் அளவிற்கு திரில்லர் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. எளிதாக சஸ்பென்சை கண்டுபிடிக்க முடிகிறது. திரைக்கதை எங்குமே தொய்வு இல்லை. அது படத்திற்கு பலம்.
ஆனால் பல இடத்தில் லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. அதை கொஞ்சம் சரிசெய்து இருக்கலாம்.
திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு லாஜிக் மிகவும் முக்கியமான ஒன்று. பின்னணி இசைக்கு பாராட்டு. எடிட்டிங் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். ஒளிப்பதிவு அருமை.
பிளஸ் பாயிண்ட்
உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா நடிப்பு பூமிகா நடிப்பு இயக்கம், எடிட்டிங் ஒளிப்பதிவு
மைனஸ் பாயிண்ட்
பல இடத்தில் லாஜிக் மிஸ்டேக் எளிதளவில் சஸ்பென்சை கண்டுபிடிக்க முடிகிறது.
மொத்தத்தில் 'கண்ணை நம்பாதே' கண்டிப்பாக பார்க்கலாம்
2.75

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
