கருப்பா இருக்காங்க, அதனால கண்ணம்மாவை எனக்கு பிடிக்காது.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விஜய் டிவி டாப் சீரியல்களில் ஒன்று. இதில் சமீபத்தில் கண்ணம்மா ரோலில் நடித்து வந்த ரோஷினி சீரியலில் இருந்து வெளியேறினார்.
இவருக்கு பதிலாக, வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா ரோலில் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் வினுஷா தேவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறுவர்களிடம் நயன்தாரா மற்றும் கண்ணம்மா வினுஷா தேவியின் புகைப்படத்தை காட்டி, யார் நல்லவர், யாரை உனக்கு பிடிக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள்.
இதற்கு அந்த குழந்தைகள் அனைவரும், கண்ணம்மாவை கைகாட்டி பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். அதில் ஒரு சிறுவன், கண்ணம்மாவை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு.
அவங்க கருப்பு நிறத்தில் இருக்காங்க அதனால எனக்கு பிடிக்கல. எனக்கு என்ன பிடிக்காது என்று. கூறுகிறார். இந்த வீடியோவை வினுஷா பதிவு செய்ததை அடுத்து, சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#BharathiKannamma #Vinusha Instagram Story pic.twitter.com/aujokOvBFK
— chettyrajubhai (@chettyrajubhai) January 27, 2022

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
