வெண்பாவை அறைவிட்ட கண்ணம்மா, ஹேமாவால் வந்த சந்தேகம்! இன்றைய எபிசோடு அப்டேட்
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வெண்பா ஒரு திட்டத்துடன் பள்ளிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு ஹேமாவை பார்க்க வருகிறார். பிரியாணி என்றதும் ஹேமா சமையல் அம்மா கொண்டு வந்த சாப்பாட்டை வேண்டாம் என சொல்லிவிட்டு வெண்பா பக்கம் சென்றுவிட்டார்.
அதன் பின் வெண்பா வந்து கண்ணம்மாவை கோபப்படுத்தும் வகையில் பேசுகிறார். ஹேமா வாயால் என்னை டாக்டர் அம்மா என சொல்ல வைக்கிறேன் பாரு என வெண்பா சொல்ல, அதன் பின் நடந்த வாங்குவாதத்தில் கண்ணம்மா அவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
அப்போது அங்கு வரும் பாரதி ஷாக் ஆகி கண்ணம்மாவை திட்டுகிறார். அதன் பின் கண்ணம்மா வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது. ரேஷன் கார்டு இருந்தால் அப்பாவை கண்டுபிடித்துவிடலாம் என லட்சுமி தேடுகிறார். ஆனால் அவர் தேடும்போதே கண்ணம்மா வந்துவிடுகிறார்.
மாலையில் ஹேமா வீட்டுக்கு வரும்போது மதிய சாப்பாடு பற்றி பேசுகிறார் பாட்டி சௌந்தர்யா. சமையல் அம்மா கொடுத்த சாப்பாடு வேண்டாம் என சொல்லிவ்ட்டு வெண்பா ஆன்டி கொண்டுவந்த பிரியாணியை சாப்பிட்டேன் என ஹேமா சொல்ல சௌந்தர்யாவுக்கு சந்தேகம் வருகிறது.
வெண்பா எந்த திட்டத்துடன் இதை எல்லாம் செய்கிறார் என அகில் உடன் பேசுகிறார். அந்த நேரத்தில் ஹேமா வாந்தி எடுக்கிறார். மத்திய வெண்பா கொடுத்த சாப்பாடு தான் காரணம் என சொல்லி சௌந்தர்யா அவரை திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.